Posts

Showing posts from May, 2026

சொல்வளர்காடு - சில வரிகள்

Image
வெண்முரசு நூல்வரிசையில் பதினொன்றாவது நூல் சொல்வளர்காடு. அதன் வாசிப்பனுபவம் சிலவரிகளில்.. "ஊழின் வழிகளைப்பற்றி ஒருபோதும் உள்ளி உள்ளிச் சொல்லாடலாகாது என்பதே மூதாதையர் கூற்று. அங்கு நிகழ்ந்தவை வேறுமுறையில் நிகழமுடியாதவை என்று உணரும் அடக்கம் இருந்தால் மட்டுமே. அவை அளித்த துயரத்தைக் கடக்கமுடியும்" சுனகக்காட்டில் தர்மனிடம் சொல்கிறார் காத்யாயனர். பன்னிரு படைக்களத்தில் இருந்து காடேகுகின்றனர் பாண்டவர்கள். உடன் தம்பிகளும் திரௌபதியும் வந்தாலும் மெய்மை தேடுவதோ தருமர்தான். கெளஷீதகம் , சுனகம் , துவைதம், ஐதரேயம் , தைத்ரியம் , பிருஹதாரண்யகம், சாந்தீபனி , மைத்ராயனியம், யக்க்ஷவனம் ஆகிய ஒன்பது காடுகளைக் கடந்து கந்தமாதானத்தில் கனலாடி மீள்கிறார் தருமன். குருநிலைகள் , அவர்களின் மரபு வரிசை அதையொட்டிய புராணக்கதைகள் என விரிந்து முன்நிற்கிறது ஒவ்வொரு காடும். சுனகத்தில் இருக்கும்போது மறுபடியும் அஸ்தினபுரியில் நிகழ்ந்ததும் அதையொட்டிய நிகழ்வுகளும் நாடகத்தருணங்களும் விரித்துரைக்கப்படுகிறது .மீண்டும் திருதராஷ்டிரரின் தந்தைப்பற்றும். அங்கிருந்து சினத்தில் கிளம்புகிறார் விதுரர் .அஸ்தினப...

சிவா கிருஷ்ணமூர்த்தி - Janus

Image
லண்டனில் வாழும் எழுத்தாளர் சிவா கிருஷ்ணமூர்த்தியின் புதிய சிறுகதை 'Janus'. https://solvanam.com/2026/04/12/janus/ https://solvanam.com/2026/04/26/janus-2/ இந்தியாவில் இருந்து இங்கிலாந்து வரும் அமர் தனது நண்பர் மோகனின் இல்லத்தில் தங்குகிறார் . அங்கு அவருக்கும் மோகனின் மகன் (கல்லூரி செல்லும் வயதில் ) யதுவுக்கும் இடையே ஏற்படும் உரசல்கள் , உரையாடல்கள் என விரிகிறது கதை. இந்த யுகத்தின் பிரதிபலிப்பாக யது அந்த பக்கமும் இல்லாமல் இந்த பக்கமும் இல்லாமல் ஒரு ஊசலாட்ட தலைமுறையின் வெளிப்பாடாய் அமர். அமரின் ஆங்கில உச்சரிப்பு , உணவு பழக்கவழக்கம் என பலவற்றை நகைப்புக்குள்ளாக்குகிறான் யது. அவர்களின் உரையாடலில் ஒரு இடத்தில் சர்ச்சில் , காந்தி போன்ற நிறவெறியர்களின் சிலைகளுக்கு லண்டனில் தார்பூசினோம் என யது சொல்கிறான் . அதில் அதிர்ச்சி அடைந்த அமர் காந்தியை எப்படி அப்படி சொல்லலாம் என கொந்தளிக்கிறார். யது எதிர்வாதமாக சர்ச்சில் இந்த ஊர் மக்களுக்கு நாயகர்தான் என்கிறான். நீங்கள் தான் சர்ச்சிலை குறை சொல்கிறீர்கள் . காந்தியும் அவ்வாறான ஒருவர்தான் வேறு நோக்கில் பார்த்தால் என சொல...

பத்துலட்சம் காலடிகள் - வாசிப்பனுபவம்

Image
விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் சார்பில் பத்துலட்சம் காலடிகள் நூல் குறித்து கடலூர் சீனு அவர்களுடன் உரையாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது . அவ்வப்போது நண்பர்கள் சொல்வார்கள் .. அடிக்கடி எழுத்தாளர்கள் சொல்வார்கள்.. நேற்றுதான் இந்த நூலைக் கொடுத்தார்கள் இரவுக்குள் படித்து முடித்துவிட்டேன் என . அதைகேட்கும்போது சற்று வியப்பும் பொறாமையும் ஒருங்கே எழும் உள்ளே. மூன்று நாட்களில் ஒரு முழு தொகுப்பை வாசித்தது எனக்கு இதுவே முதல்முறை. பத்துலட்சம் காலடிகள் பற்றி .. வேட்டு , வேரில் திகழ்வது , ஓநாயின் மூக்கு , கைமுக்கு, பத்துலட்சம் காலடிகள் என ஐந்து கதைகள் . ஒளசேபச்சன் என்கிற ஒய்வு பெற்ற காவல் அதிகாரியுடன் கடற்கரையில் காட்டிற்குள் உணவகத்தில் மதுபானக்கூடத்தில் என நண்பர்கள் உணவும் மதுவும் உடனிருக்க நிகழ்த்தும் உரையாடல் பாணியிலான கதைகள் இவை. மையக்கதைகளை ஒளசேபச்சன் சொல்கிறார் அவரின் பணி அனுபவத்தில் இருந்து .. அவரையும் சேர்த்து கதையாக்கி நம்மிடம் சொல்கிறார் மலையாளமும் தமிழும் சரிபாதி தன்னுள் கொண்ட பாண்டித்தமிழ் எழுத்தாளர் (இவரும் ஒளசேபச்சன் நண்பர்களில் ஒருவர்) முதலில் களம் அமைக்கப்படுகிறது, பேச்...