சென்றடையவில்லை என்னும் நிறைவின்மை !

இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் தலைப்புதான் என்னை சிறிதளவேனும் வாசிக்க வைக்கிறது , முன்நகர்த்துகிறது என்று சொல்ல முடிகிறது . ஆனால் அதன் பக்க விளைவுகளில் ஒன்று . வாசிக்கும் வேகத்தைவிட வாங்கும் வேகம் அதிகமாகி வீட்டில் நிறைந்துவரும் நூல்கள் . ஒரு நேரம் சிறிய குற்றவுணர்வும் பெரும்பாலும் நிறைவுமே கொள்கிறேன் அந்த செயலால். திடீர் என எழுந்து சென்று அடுக்கில் இருந்து எடுத்து ஒரே நாளில் சமீபத்தில் வாசித்த நூல் ' சில ஆசிரியர்கள் சில நூல்கள்' . அசோகமித்திரனின் கட்டுரைத் தொகுப்புகள் அடங்கிய இந்த நூல் . தமிழ் எழுத்தாளர்களில் தொடங்கி உலக எழுத்தாளர்கள் பலரை மற்றும் தமிழ் நூல்கள் சிலவற்றை அறிமுகம் செய்கிறது. இந்த புத்தகத்தில் குறிப்பிடத்தகுந்த அம்சங்கள் என நான் உணர்வது சில உண்டு . ஒன்று அசோகமித்திரனின் நூல்களில் நான் வசிக்கும் முதல் அபுனைவு நூல் இது . சரி அவரின் புனைவு நூல்கள் நிறைய படித்துவிட்டாயா என்றால் அதுவுமில்லை . மணல் என்ற குறுநாவல் மட்டும் Tamil Literary Talks ல் அறிந்து வாசித்துள்ளேன் முன்பு. இரண்டு , நாம் ஆத்மார்த்தமாக உணர்ந்து செய்யும் விழையும் எதுவும் நம்மை நாடி வரும் ...