Posts

Showing posts from March, 2025

க.நா.சு - இலக்கியத்துக்கு ஓர் இயக்கம்

Image
க.நா.சு . இந்த பெயரை நான் அதிகம் படித்தது. கேட்டது எனது ஆசிரியர் ஜெயமோகன் மற்றும் எழுத்தாளர் சுரேஷ் பிரதீப் இவர்களின் எழுத்துக்களில் உரைகளில். அதன் மூலம் சென்றடைந்தது https://www.jeyamohan.in/29168/ . அவரின் ஒரு நூலையாவது முதலில் படிக்கவேண்டும் என முடிவு செய்து வாங்கியது 'இலக்கியத்துக்கு ஓர் இயக்கம்'. இந்த நூலை தேர்ந்தெடுக்க இன்னொரு காரணம் பெங்களூர் இலக்கிய விழாவில் ஆசிரியரை பேட்டி கண்ட எழுத்தாளர் பொழிபெயர்ப்பாளர் சுசித்ரா இந்நூலை மேற்கோள்காட்டி பேசினார். கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு எனது நண்பர் ஒருவருக்கு அறம் சிறுகதைத் தொகுப்பை வாசிக்கக் கொடுத்தேன். இன்னொரு நண்பருக்கு அவரின் மகன் ஆங்கிலத்தில் படிக்கும்வண்ணம் 'Stories Of the true' வாங்கிக் கொடுத்தேன் . இருவருமே சொன்ன ஒன்றுண்டு . ' இது என்ன இவ்வளவு raw வா இருக்கு ', ' கெட்ட வார்த்தை எல்லாம் பயன்படுத்தியிருக்கிறார். இதை படிக்கும் ஒருவர் எப்படி கடைத்தேறுவார் இப்படி பல கேள்விகள். அப்போது நான் சொன்னது ..பகடிக்காக ஆனால் அவர்களுக்கு உண்மையாக தோன்றும்படி 'ஆமாம் உண்மைதான் . இந்த கருத்துக்களை ஜெயமோகன் அ...

ஜெயமோகனின் நாளும் பொழுதும்

பேராசான் ஜெயமோகனின் ' நாளும் பொழுது ' நூலை வாசித்தேன் . அனுபவக் கட்டுரைகள் என்று சொல்லத்தக்கவை. அவர் இயங்கும் மூன்று தளங்களில் கண்டவற்றை பதிவு செய்துள்ளார். நான் , சினிமா , சமூகம் என்ற அந்த மூன்று பிரிவுகளில் கொடுக்கப்பட்டிருக்கும் கட்டுரைகள் ஒவ்வொன்றும் புனைவுக்கு நெருக்கமாகவும் அதே நேரத்தில் அவை பேசுவன இன்றும் நம் வாழ்க்கையுடன் பொருந்தும் வண்ணமும் திகழ்கின்றன . சில கட்டுரைகள் துவக்கத்தில் பகடியுடனோ அல்லது சாதாரணமாகவோ தென்படுகின்றன ஆனால் அதன் மையத்திலோ அல்லது கட்டுரை நிறைவடையும் இடத்திலோ நம்மை கலைத்துவிடுகின்றன . சமூகத்தின் கீழ் வரும் கட்டுரைகள் நமது பண்பாட்டை அறிமுகம் செய்கின்றன அவரின் அனுபவத்தின் ஊடாக அல்லது நமது நடவடிக்கைகளை நம்மையே கேள்வி கேட்டுக் கொள்ளும் வண்ணம் நிகழ்ந்துள்ளன . காசி பற்றிய எழுத்துகள் மரணத்தை நமக்கு வேறொரு கோணத்தில் காட்டுகின்றன . திருமண பந்தி பற்றி ஒரு கட்டுரை , இதை ஒரு printout எடுத்து ஒவ்வொரு திருமண மண்டபத்திலும் கொடுத்து அமுல் படுத்த செய்தால் அது ஒரு ஆகச் சிறந்த செயல்பாடாய் மாறும் . சினிமா மோகத்தில் நாம் எப்படி வரலாறை தொலைக்கிறோம் என்பதை குஷ்பூ ...

வெண்முரசு நாவல் 'வெண்முகில் நகரம்' - வாசிப்பனுபவம்

இந்த ஆண்டின் முதல் வெண்முரசு நாவல் 'வெண்முகில் நகரம்' . முதல் வாசிப்பு இன்றுடன் நிறைவு. தொடுதிரை விடுத்து நூலாய் கையில் எடுத்து வாசித்ததும் இதுவே முதல் வெண்முரசு நாவல். கதைச்சுருக்கமும் , தரிசனமாய் அடைந்தவைகளும் என தொகுக்க ஓர் சிறிய முயற்சி : மணத்தன்னேற்பில் திரௌபதியை வென்று பாஞ்சாலத்தில் வாழ்கிறார்கள் பாண்டவர்கள். அவளுக்கானவன் வென்ற பார்த்தனா , மூத்தோன் தருமனா என்று வாதங்களில் தொடங்கி மூத்தோர் சொல்லை துணை கொண்டு அரசாண்மைத் தேவைகளைக் கருத்தில் கொண்டு ஐவருக்குமானவள் அவள் என்பது முடிவாகிறது. முறை வைத்து நடக்கிறது அவர்கள் ஒவ்வொருக்குமான முதற் தனிக்கூடல் திரௌபதியுடன். ஆழ்கடல் பாவையில் தருமனும், பிடியின் காலடிகளில் பீமனும், தழல் நடனத்தில் அர்ஜுனனும் , ஆடிச் சூரியனென நகுலனும் அவ்வாடியின் அனலில் சகதேவனும் இணைகிறார்கள் அவளுடன். ஒவ்வொருவருடனும் அவரவர் திறன் அறிந்து அளிக்கிறாள் அன்னை தன்னை ! தனிப்பட்ட காதல் செய்தல்களுடன் அரசு செய்தலுக்கான அடித்தளமும் சேர்ந்தே நடக்கிறது. காம்பில்யத்தில் நடந்த மணத்தன்னேற்பு நிகழ்வுகள் மற்றும் தங்கள் எதிர்காலம் பற்றிய கனவுகள் சஞ்சலங்கள் மனதிலோட தங்கள் மண் ...

அப்பா - ஒரு அறிமுகம்

நண்பர்களுக்கு வணக்கம் . இந்தப் பதிவு எனது அப்பாவைப் பற்றிய சிறு அறிமுகத்தையும் அவருடனான எனது சில நினைவலைகளையும் உங்களுக்கு அளிக்கலாம். (இதில் பெயரில் பின்வரும் பட்டப்பெயர்கள் என் ஊரைச் சார்ந்த சிலர் வாசிக்கக்கூடும் அவர்களுக்கு கூடுதல் தெளிவை ஏற்படுத்தவே அப்படி எழுதியுள்ளேன். துளியளவும் சாதி சார்ந்த வெற்றுப் பெருமை எனக் கொள்ளவேண்டாம் என பணிவுடன் கூறி மன்னிக்க வேண்டுகிறேன்) வீட்டில் இருக்கும் நேரங்களில் நினைவு தெரிந்த நாள் முதல் பெரும்பாலும் அப்பாவின் அருகமர்ந்து அவரின் சொற்களைக் கேட்டுக்கொண்டும் அவரிடம் பேசிகொண்டுமிருப்பேன். அவ்வாறான உரையாடல்களில் அவரிடமிருந்து வரும் பெயர்களில் பலரை நான் நேரில் பார்த்ததில்லை. நான் பிறக்கும் முன்பே இறந்துவிட்டிருந்தனர் பலர். சிலர் இருந்து கொண்டிருந்தனர், ஏனையோர் ஒவ்வொருவராக இறந்து கொண்டிருந்தனர் . அந்த பெயர்களில் எனது நினைவில் இன்றும் நினைவில் நிற்பவர்கள் தெய்வத்திருவாளர்கள் ,பெரியப்பாக்கள் K.R.சிதம்பரம் , மாமா R.A.துரைசாமி , அதற்கும் முந்தைய தலைமுறையான தாத்தாக்கள் ஆறுமுகம் காலிங்கராயர்(அவரின் சித்தப்பா) , வாசுதேவ காலிங்கராயர் , சிக்கல் சிங்காரவேலர் ,...

ஆசான் ஜெயமோகனின் வெண்முரசு - பிரயாகையுடனான எனது முதல் பயணம்

உலகப் பேரிலக்கியங்களில் ஒன்றான ஆசான் ஜெயமோகனின் வெண்முரசு - பிரயாகையுடனான எனது முதல் பயணம் இன்றுடன் இனிதே நிறைவுற்றது. துருவன், அர்ஜுனன் , பீமன் , சகுனி , திருதராஷ்டிரர் , விதுரர் , குந்தி , துருபதன் , பாஞ்சாலி என மனதாண்ட பலருடன் மறக்க முடியாத 92 நாட்கள் . உத்தானபாதனின் மைந்தன் துருவனின் கதையில் இருந்து தொடங்குகிறது இந்த நாவல். ஒருவன் தன கீழ்மைகளை எங்கு காண்பிப்பான் , எங்கு மறைத்து மண் வீழ்வான் என்பதற்கு உத்தானபாதனின் செயல்களே உதாரணம் .அவனின் மனைவி மகனென அரண்மனையில் வாழ்ந்தாலும் எங்கும் மதிப்பிழந்து உமிழப்படும் சிற்றுயிர்களாய் சுநீதியும் அவள் மகன் துருவனும். அவனின் எழுச்சியும் தேடலும் அவமானங்களை அடித்தளமாய் கொண்டு வளர்கிறது. உடலால் ருசி தேடி இன்னொரு மனைவி சுருசியிடம் தஞ்சம் அடைந்து வந்தாலும் அவள் ஒரு எளிய பெண் அவ்வளவே அவளின் உயரம் என்பதை உத்தானபாதன் உணராமல் இல்லை. 'கொடியென எண்ணுகையில் பாம்பெனச்சீறி பாம்பென அணுகுகையில் கொடியெனச் சுருளும் வித்தை மட்டுமறிந்த விஷமற்ற பச்சைப்பாம்பு.' என்று அவளை மனதில் மதிப்புரைத்துக்கொள்கிறான். நீதியும்(சுநீதி ) அங்கு தான் அவனருகிலேயே உள்ளது ஆனா...