Posts

2025 இல் நான் வாசித்த நூல்கள் , பக்கங்கள்

Image
நாவல்கள் & சிறுகதைகள் : குமரித்துறைவி - ஜெயமோகன் - 175 பக்கங்கள் வெண்முரசு - வெண்முகில் நகரம் - 1071 பக்கங்கள் வெண்முரசு - இந்திர நீலம் - 958 பக்கங்கள் வெண்முரசு -காண்டீபம் - 786 பக்கங்கள் வெண்முரசு - வெய்யோன் - 853 பக்கங்கள் ஒளிர் நிழல் - சுரேஷ் பிரதீப் - 128 பக்கங்கள் பத்துப்பாத்திரங்கள் - சுரேஷ் பிரதீப் - 82 பக்கங்கள் வாடிவாசல் - கிராபிக்ஸ் நாவல் - 112 பக்கங்கள் தங்கப்புத்தகம் - ஜெயமோகன் - 288 பக்கங்கள் ஆனையில்லா - ஜெயமோகன் - 320 பக்கங்கள் மலர்த்துளி - ஜெயமோகன் - 200 பக்கங்கள் நீலத்தாவணி - ரம்யா - 126 பக்கங்கள் காவியம் - ஜெயமோகன் - சுமார் 500 பக்கங்கள் நீல நிழல் - ஜெயமோகன் - சுமார் 100 பக்கங்கள் மைத்ரி - அஜிதன் - 239 பக்கங்கள் வெள்ளிநிலம் - ஜெயமோகன் - 242 பக்கங்கள் கவிதை: அந்தியில் திகழ்வது - வே.நி.சூர்யா - 72 பக்கங்கள் கரப்பானியம் - வே. நி . சூர்யா - 103 பக்கங்கள் உன்னை யாரும் அனைத்துக்கொள்ளவில்லையா - 1775 பக்கங்கள் காந்தியைக்கொன்றது தவறுதான் - ரமேஷ் பிரேதன் - 140 பக்கங்கள் கட்டுரை: துடிக்கின்ற நெஞ்சென்று ஒன்று - 104 பக்கங்கள் குரு - எச்.எஸ்.சிவப...

ரா.கிரிதரனின் சாதகப்பறவையின் காத்திருப்பு

Image
தஞ்சை பெரியகோவிலுக்கு கண்ணந்தங்குடியில் இருந்து சென்று அமர வயது 28 ஆக வேண்டியிருந்தது எனக்கு.அப்படி பல நிகழ்வுகளை எல்லோராலும் தனது வாழ்நிகழ்வுகளில் இருந்து பட்டியலிடமுடியும்தான். கடந்த ஓரிரு ஆண்டுகளாக லண்டன் இலக்கிய வட்ட நண்பர்களுடன் கதை விவாதங்கள் (அவ்வப்போதேனும்), நேர் சந்திப்புகள்(பெரும்பாலும்) என தொடர்ந்து உரையாடி வருகிறேன். லண்டன் இலக்கியவட்டம் சுமார் பத்து ஆண்டுகளாக செயல்பட்டுவருகிறது. வாரம் ஒருமுறை வாட்ஸாப் உரையாடலில் இலக்கியம் வளர்க்க முயற்சி செய்வதும் அதன் செயல்திட்டத்தில் ஒன்று எனக் கொள்ளலாம். இந்த நண்பர்கள் குழாமின் முன்னணி முகங்களில் ஒருவர் எழுத்தாளர் ரா.கிரிதரன். அவரை முதலில் பார்த்த போது அவரின் வசீகரிக்கும் சிரிப்பும் , உரையாடல்களின்போது அவர் வைக்கும் வாதங்களும் அவர் சொல்லாமல் சொல்லின அவரின் வாசிப்பின் ஆழத்தை.ஆனால் அவர் எழுத்தாளர் என்பது சற்று பிந்திதான் தெரியவந்தது. நூல்களும் வெளிவந்துள்ளன என்கிற செய்தி முதலில் ஒரு ஆச்சர்யத்தை அளித்து பின்பு சற்று அடங்கிவிட்டது என்னுள். ஆனால் மாறாச் செயலாய் அவர் நூல்களை மட்டும் சேகரித்து வைத்திருந்தேன். திடீரென மேலே சொன்னேனே ...

வெண்முரசு - வெய்யோன் - வாசிப்பனுபவம்

Image
'ஏன் சிவதரே, என்னை விழையும் எவரும் இங்கில்லையா ?' கர்ணன் சொல்லும் இந்த வரியைக் கொண்டே மொத்த நாவலையும் பார்த்தால் புரியும் , அது சொல்வது யாராலும் மறுக்கமுடியாமை ஒன்றை. இந்த ஆண்டு வாசித்த வெண்முரசின் கடைசி நாவல் வெய்யோன். கர்ணனின் கதைகளை, அலைக்கழிப்புகளை , கைவிடப்படும் நிகழ்வுகளை என பலவற்றை சொல்லிச் செல்கிறது வெண்முரசு வரிசையில் ஒன்பதாவதாக அமைந்த இந்நூல். செந்தழல் வளையத்தில் இருந்து தொடங்குகிறது சம்பாபுரி அரண்மனையில் சூதர்மொழியில் தன்கதையை தானே கேட்டு அமர்ந்திருக்கிறான் கர்ணன். பரசுராமரால் கைவிடப்படும் கதை. தாழொலிக்கதவுகளில் அங்கநாட்டின் சம்பாபுரி அரண்மனையில் அவைமுறைமைகள், சம்பிரதாய சடங்குகள் எவ்வண்ணம் உருவாகி வந்தது. அதோடு அங்கிருந்த அரசுக்கு மாற்றாய் ஒரு சூதன் மகன் அரசமைக்க அதை மக்களும் அவையும் ஏற்றுக்கொள்ள வைக்க அமைச்சர்களின் பங்களிப்பு என்ன என்ன என தொடங்குகிறது இந்த பகுதி. வெய்யோன் மகன் , அளித்துதீராதவன் என அடைமொழிகளுக்கு நிகராய் வசைச்சொற்களும் வந்து விழுகிறது கர்ணனின் மேல் . அரசு சூழ்தல் , ஆட்சி அதிகாரம் என இவை அனைத்திற்கும் அப்பாற்பட்டவனாய் வேறொரு உலகத்தில் வா...

வெண்முரசு - காண்டீபம் - வாசிப்பனுபவம்

Image
சில ஆண்டுகளுக்கு முன்பு நான் இருக்கும் ஊரில் தமிழ்ச் சங்கமொன்றின் தீபாவளி விழாவில் வழக்கத்திற்கு மாறாக சில தமிழ்நூல்களையும் விற்பனைக்கு வைக்கலாம் என ஏற்பாடு செய்திருந்தோம். புத்தகங்களை ஒரு மேசையில் வைத்துவிட்டு அந்த விற்பனைக்கு உதவ ஒவ்வொருவரிடமும் கேட்டுக்கொண்டிருந்தேன் . நான் சென்று கேட்ட அனைவரும் ஒரே பொருளை வெவ்வேறு சொல்கொண்டு தந்தனர். 'என்னால் அது முடியாது' என்பதுதான் அது . அப்போது ஒரு நண்பர் அவராக வந்து புத்தகங்களை எடுத்து பிரித்துப்பார்த்துக்கொண்டிருந்தார் . கொஞ்சம் பேசியதில் அவருக்கு அந்த மேசையில் அன்று நாள் முழுக்க அமர்ந்து விற்பனையை கவனிக்க விருப்பம் எனத் தெளிந்தேன். அப்போது அவரிடம் நூல்கள் அதன் ஆசிரியர்கள் நூல்களுக்கான விலை விவரங்கள் என சொல்லத்துவங்கினேன். அதை அவர் இடைமறித்து நானும் புக் படிப்பேன். ஜெமோ வாசகன்தான் என்றார் ஷேக்ஸ்பியர் பிறந்த ஊரில் வாழ்ந்து வரும் பிரசாத். அன்று அத்துணை கூட்டத்திலும் நானும் அவரும் தனித்து இருந்தோம். உரையாடினோம் . அப்போது அவர் கேட்ட கேள்வி ' வெண்முரசு படிக்கிறீங்களா' . நான் 'இல்ல இப்போதான் தன்மீட்சி அறம் என சென்றுகொண...

வெண்முரசு - இந்திரநீலம் - வாசிப்பனுபவம்

Image
வெண்முரசு நாவல் வரிசையில் ஏழாவது நாவல் இந்திரநீலம். தினம் ஒரு அத்தியாயம் என்ற முறையில் வாசிப்பை நேசிப்போம் நண்பர்களுடன் இணைந்து , தினமும் எனக்குள்ளும் ஒலிக்கவிட்டுக் கொண்டிருக்கிறேன் வெண்முரசை. ஒருநாவல் முடிந்ததும் அடுத்ததை எடுத்து வெறுமனே எனது பார்வையில்படும்படி வைத்துக்கொள்வேன். பின்பு முன்னுரைகளை வாசிக்க ஒருநாள் எடுத்து அதை என்னுள் ஓடவிட ஒருநாள் என்று போகும். அவ்வாறான ஒரு செயல்பாட்டில் இம்முறை இறங்கியபோது எப்போதும்போல இப்போதும் பொய்க்காது நான் கண்டது திருசூழ் பெருநிலையை அதன் மூலமாய் அறிந்தேன் கேளு சரண் மகாபாத்யாய அவர்களை. இப்போது இந்திரநீலம் பற்றி .. துவாரகை கண்ட இளையயாதவன் தனது துணைவியராய் ருக்மிணி , ஜாம்பவதி , சத்யபாமை, நக்னஜித்தி, மித்ரவிந்தை, லட்சுமணை , பத்ரை , காளிந்தி ஆகிய எட்டு நாயகியரை கண்டடைந்து காதல்கொண்டு தம் உள்ளம் அமர்ந்த அத்தேவியரை வான்தோய் வாயில் கொண்ட துவாரகையில் அமர்த்தும் கதைகளை சொல்வதே இந்த நாவல். எட்டு குலங்களில் இருந்து பெண்கொண்டு வரும் கதைகள் துருபத இளவரசன் திருஷ்டத்யும்னன், இளைய யாதவருக்காக தொழும்பர்குறி பெற்ற சாத்யகி இவர்கள் இருவரின் நட்பாடல...

உயிர்த்தெழ ஒரு பயணம் - மூன்றாம் , நான்காம் நாட்கள் மற்றும் வீடு திரும்பல்

Image
ஒரு குழுவாக பயணம் செய்வதில் அதுவும் அந்த பயணத்தை நோக்கிய ஒத்தக்கருத்துடைய நண்பர்களுடன் செல்வது எப்போதும் மகிழ்ச்சியே. ஆனால் அதிலுள்ள பெரிய இடரே நேர மேலாண்மை. நேர மேலாண்மையை வெள்ளைக்காரர்களிடம் காண்பிப்பதில் நிறுவுவதில் நம்மவர்கள் வல்லுநர்கள். ஆனால் நம் மக்களிடம் சலுகைகள் எடுத்துக்கொள்வோம் . நான் உண்பது மற்றவர்களின் நேரத்தை என்ற புரிதல் அறவே அற்று . இந்த பயணத்தில் ஒரு அட்டவணையை மிகத்தெளிவாக தயாரித்து முன்னரே அளித்தது மட்டுமல்லாமல் . அதை செயல்படுத்தியத்திலும் முன்நின்றவர்கள் நண்பர் சந்துருவும் அவரது மனைவி ப்ரியாவும் . ஊரில் மாட்டிற்கு குத்துவதற்கு (அப்படி குத்தினால் அது வேகமாக அதன் வேலையை செய்யும் .. வண்டியிழுக்கும் , ஓடும் , உழும்) தார்குச்சியை பயன்படுத்துவோம் . அது மூங்கில் குச்சிதான் அதன் முனையில் ஆணி அடித்து அதை பென்சில் முனை போன்று கூர்தீட்டப்பட்டிருக்கும். மாட்டின்மேல் அன்புள்ளவர்கள் அதை மெதுவாக மாட்டின் உடம்பின்மேல் வைக்கமட்டுமே செய்வர். அதுபோல இந்த பயணத்தில் எங்களை விரட்டி யாரும் யாருடைய நேரத்தையும் வீணாக்காமல் திட்டத்தின்படி செல்லவைத்தார்கள் அவர்கள். ஞாயிறு ...

உயிர்த்தெழ ஒரு பயணம் - இரண்டாம் நாள்

Image
காலையில் எழுந்ததும் கடலைப்பார்த்து கண்விழிப்பதெல்லாம் எனது அன்றாடத்தில் ஒருவகை ஆடம்பரம் என்று தோன்றினாலும் . அதுவொரு அரிய நிகழ்வே. அப்படி புனிதவெள்ளிக்கு மறுநாள் நாங்கள் டாம்மி ஜாக்ஸ் அடுக்ககத்தில் இனிய ஓய்வுக்குப்பிறகு கண்விழித்தோம் . முதல்நாள் மழைத்தூறலினூடாகவே இருட்டில் ஆண்கள் மட்டும் கடற்கரை சென்று வந்ததால் காலை பெண்மணிகள் செல்லவேண்டும் என்பது எழுதப்படாத ஒரு புரிந்துணர்வு. எங்கள் பயண அமைப்பாளர் சந்திரமௌலி வழிகாட்டுதலில் வண்டி ஓட்டுதலில் சௌமியா , ரைஹானா , ப்ரியா இவர்களுடன் தாயுடன்தான் இருப்பேன் என்று நிமலன் அடம்பிடித்ததால் அவன் . இவர்கள் காலையில் வெண்மையும் நீலமுமாய் மேலே வானம் விரிந்திருக்க அதை தன்னகத்தே வாங்கி நம்மகத்தே அளிக்கும் கடலை நோக்கி சென்றனர் . யாகவியைத் தவிர மற்ற குழந்தைகள் எல்லாம் நீள்துயிலில். யாகவி மட்டும் நாங்கள் வீட்டில் தினமும் ஒப்புநோக்க சற்று சீக்கிரம் காலைப்பணிகளை தொடங்கிவிடுவதால் அவளும் அவ்வாறே எழுந்து பழகியுள்ளாள். அதிகம் பேசவும் , கேள்வி கேட்கவும் . அவளின் இந்த செயல்பாடுகளால் சௌமியாவும் நானும் அவ்வப்போது இன்பச்சிக்கல்களில் மாட்டிக்கொள்வதுண்டு. நண்பர்களிட...