உயிர்த்தெழ ஒரு பயணம் - மூன்றாம் , நான்காம் நாட்கள் மற்றும் வீடு திரும்பல்

ஒரு குழுவாக பயணம் செய்வதில் அதுவும் அந்த பயணத்தை நோக்கிய ஒத்தக்கருத்துடைய நண்பர்களுடன் செல்வது எப்போதும் மகிழ்ச்சியே. ஆனால் அதிலுள்ள பெரிய இடரே நேர மேலாண்மை. நேர மேலாண்மையை வெள்ளைக்காரர்களிடம் காண்பிப்பதில் நிறுவுவதில் நம்மவர்கள் வல்லுநர்கள். ஆனால் நம் மக்களிடம் சலுகைகள் எடுத்துக்கொள்வோம் . நான் உண்பது மற்றவர்களின் நேரத்தை என்ற புரிதல் அறவே அற்று . இந்த பயணத்தில் ஒரு அட்டவணையை மிகத்தெளிவாக தயாரித்து முன்னரே அளித்தது மட்டுமல்லாமல் . அதை செயல்படுத்தியத்திலும் முன்நின்றவர்கள் நண்பர் சந்துருவும் அவரது மனைவி ப்ரியாவும் . ஊரில் மாட்டிற்கு குத்துவதற்கு (அப்படி குத்தினால் அது வேகமாக அதன் வேலையை செய்யும் .. வண்டியிழுக்கும் , ஓடும் , உழும்) தார்குச்சியை பயன்படுத்துவோம் . அது மூங்கில் குச்சிதான் அதன் முனையில் ஆணி அடித்து அதை பென்சில் முனை போன்று கூர்தீட்டப்பட்டிருக்கும். மாட்டின்மேல் அன்புள்ளவர்கள் அதை மெதுவாக மாட்டின் உடம்பின்மேல் வைக்கமட்டுமே செய்வர். அதுபோல இந்த பயணத்தில் எங்களை விரட்டி யாரும் யாருடைய நேரத்தையும் வீணாக்காமல் திட்டத்தின்படி செல்லவைத்தார்கள் அவர்கள். ஞாயிறு ...