எனது மகளின் தமிழ் பள்ளி பேச்சுப்போட்டி க்கு தயார் செய்த வரிகள் :


அரங்கில் அமர்ந்திருக்கும் எனது மரியாதைக்குரிய ஆசிரியர்களுக்கும் , நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த வணக்கம்.


நான் பேச வந்துள்ளது இங்கு நம்மை இணைத்திருக்கும் மையச்சரடாம் நமது தாய் மொழியாம் தமிழின் சிறப்பைப் பற்றி !


தமிழுக்கு மகத்தான் பண்பாட்டு மரபொன்று உள்ளது. அந்தப் பண்பாடு இலக்கியம், கலை, மதம் என மூன்று களங்களில் முதன்மையாக உறைகிறது.


சங்க இலக்கியம் முதல் நவீன இலக்கியம் வரை, அதாவது தொல்பழங்காலம் முதல் தற்காலம் வரை அறுபடாது நீடிக்கும் ஓர் இலக்கிய மரபு தமிழுக்கு உண்டு. தமிழின் தொன்மை அல்ல நமது பெருமைக்குரிய விஷயம். தமிழை  விட தொன்மையான பண்பாட்டு மரபுகள் உலகில் உள்ளன. தமிழை  விட இலக்கிய வளர்ச்சியும் தொன்மையும் உள்ள மொழிகளும் உள்ளன. தமிழின் அறுபடாத தொடர்ச்சி என்பதுதான் நமது முதல்பெருமை.


தமிழின் பெருமிதங்களில் இரண்டாவது, இங்குள்ள் மாபெரும் கலைவெற்றிகள். நம் கலைவெற்றிகள் மூன்று களங்களில் உள்ளன. அவை   கோயிற்கலை,  சிற்பக்கலை.மற்றும் நம் வெண்கலச் சிற்பக்கலை. 


மூன்று நம் இசைமரபு. அதன் பண்ணிசைவேர்களும் நவீன வடிவமும் நம் சாதனைகள். அதை நாம் இன்னும் உலகத்தின் கண்களுக்கு கொண்டுசெல்லவில்லை. 


உலக இலக்கிய வெளியில் பெருமிதத்துடன் கொண்டு சென்று வைக்கும் தகைமை படைத்த படைப்புகள் நவீனத்தமிழில் எழுதப்பட்டுள்ளன என்று  என்னால் உறுதியாகச் சொல்ல முடியும்.


கம்பன் , கபிலர், அவ்வை , வள்ளுவர், பாரதி, மு.தளையசிங்கம் ,  அயோத்திதாசர் , கைலாசபதி, அ . முத்துலிங்கம் , ஜெயகாந்தன் , காலம் செல்வம், ஜெயமோகன் , ஷோபா சக்தி , அகரமுதல்வன் , அம்பை என எண்ணிலடங்கா  சொற்சிற்பிகள்  எத்தனை  பேர் தமிழில் .  


தமிழ்நிலத்தில் உருவான தனித்தன்மை கொண்ட மூன்று தத்துவப்பேரியக்கங்கள் உள்ளன.


இன்று அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த தமிழ்க்குழந்தைகள் கிரேக்க, ரோமானிய, மறுமலர்ச்சிக்கால தத்துவ சிந்தனைகள் அறிமுகமாயிருக்கின்றன. அவர்களுக்கு தமிழ்த்தத்துவம் எவையும் பெயரளவுக்குக் கூட அறிமுகமல்ல.


தமிழும், பண்பாடும் நீடிக்க வேண்டுமெனில் தமிழின் மெய்யான வெற்றிகள், சிறப்புகள் அடையாளப்படுத்தப்படவேண்டும். அதைச் செய்ய நாளைய அறிஞர்கள்  ஆன நம்மால் தான் முடியும்.


வாசிப்போம் தமிழை நம் அகம் குளிர !

வளர்ப்போம் அதன் பண்பாட்டை வையகம் உணர !


நன்றி, வணக்கம் !


Courtesy : 







Comments

Popular posts from this blog

க.நா.சு - இலக்கியத்துக்கு ஓர் இயக்கம்

வெண்முரசு - இந்திரநீலம் - வாசிப்பனுபவம்

சென்றடையவில்லை என்னும் நிறைவின்மை !