Posts

Showing posts from January, 2024
எனது மகளின் தமிழ் பள்ளி பேச்சுப்போட்டி க்கு தயார் செய்த வரிகள் : அரங்கில் அமர்ந்திருக்கும் எனது மரியாதைக்குரிய ஆசிரியர்களுக்கும் , நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த வணக்கம். நான் பேச வந்துள்ளது இங்கு நம்மை இணைத்திருக்கும் மையச்சரடாம் நமது தாய் மொழியாம் தமிழின் சிறப்பைப் பற்றி ! தமிழுக்கு மகத்தான் பண்பாட்டு மரபொன்று உள்ளது. அந்தப் பண்பாடு இலக்கியம், கலை, மதம் என மூன்று களங்களில் முதன்மையாக உறைகிறது. சங்க இலக்கியம் முதல் நவீன இலக்கியம் வரை, அதாவது தொல்பழங்காலம் முதல் தற்காலம் வரை அறுபடாது நீடிக்கும் ஓர் இலக்கிய மரபு தமிழுக்கு உண்டு. தமிழின் தொன்மை அல்ல நமது பெருமைக்குரிய விஷயம். தமிழை  விட தொன்மையான பண்பாட்டு மரபுகள் உலகில் உள்ளன. தமிழை  விட இலக்கிய வளர்ச்சியும் தொன்மையும் உள்ள மொழிகளும் உள்ளன. தமிழின் அறுபடாத தொடர்ச்சி என்பதுதான் நமது முதல்பெருமை. தமிழின் பெருமிதங்களில் இரண்டாவது, இங்குள்ள் மாபெரும் கலைவெற்றிகள். நம் கலைவெற்றிகள் மூன்று களங்களில் உள்ளன. அவை   கோயிற்கலை,  சிற்பக்கலை.மற்றும் நம் வெண்கலச் சிற்பக்கலை.  மூன்று நம் இசைமரபு. அதன் பண்ணிசைவேர்...

அயோத்திதாசர் என்னும் முதற் சிந்தனையாளர்

https://www.jeyamohan.in/18154/ அன்புள்ள நண்பர்களுக்கு , வணக்கம். ஆசிரியரின் 'அயோத்திதாசர் முதற்சிந்தனையாளர்' என்ற கட்டுரைத்  தொடரை வாசித்தேன்.  முதற்  சிந்தனை என்றால் என்ன , வழிச்சிந்தனை என்றால் என்ன என்ற விளக்கத்துடன் துவக்கப்படும் இந்த கட்டுரை , ஒரு ஆரம்ப நிலை அறிதலுக்கு ஏற்றவாறு மிகத் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது . இதில் தான் நான் பாரதி , ஈ .வே.ரா முதலியோரின் சிந்தனைகளின் ஊற்றுமுகம் என்ன என அறிந்து கொண்டேன் . இதில் சொல்லப்பட்டிருக்கும் கருத்துக்களை அப்படியே நான் நம்புவதற்கு முன் அது சரி தானா என எனக்கு நானே கேட்டுக்கொண்டேன் . ஆம் என்றே உள்ளுணர்வு சொல்லியது. மிக முக்கியமாக ,  பாரதி , ஈ .வே.ரா , ஜெயகாந்தன் , சுந்தர ராமசாமி முதலானோர் ஏன் வழிச் சிந்தனையாளர்கள் என தெளிவு படுத்தி பின்பு ஆசிரியரின் கோணத்தில் முதற் சிந்தனையாளர்கள் என எஸ்.என்.நாகராஜன்,மு.தளையசிங்கம் & பண்டித அயோத்திதாசர் இவர்களை அறிமுகம் செய்த விதம் ஏற்புடையதாக இருந்தது . மேலும் அவர்களைப் பற்றி மேலும் அறிய வாசிக்க தொடக்கப்புள்ளியாய் அமைந்தது . உள்ளபடியே சொல்லவேண்டுமென்றால் , எஸ்.என்.நாகராஜன் என்ற பெயரை ந...
 Test