கொடைமடம் - வாசிப்பனுபவம் - அண்ணன் சாம்ராஜிடம் பகிர்ந்தது
அன்புள்ள அண்ணனுக்கு, வணக்கம். தங்களின் 'கொடைமடம்' வாசித்தேன் . இப்போது பெருமையுடன் சொல்ல முடியும் எழுத்தாளர் சாம்ராஜின், வெளியான அனைத்து படைப்புகளையும் வாசித்த வாசகர்களில் நானும் ஒருவன் என. தங்களை நான் சந்தித்துள்ளேன். நேரில் உரையாடும் நல்லூழைப் பெற்றேன் என்பதால் அல்ல. தங்களின் எழுத்து என்னை அந்த கதைக்களத்துடன் வாழ செய்கிறது. அதில் சில நான் வாழ்ந்த அல்லது வாழத் தவற விட்ட அல்லது மிகத் துல்லியமாக சொன்னால் இனியாவது அகத்தாய்வு செய்து அப்படி வாழ விரும்புகிற தருணங்களை அடிக்கோடிட்டு காட்டுகிறது என்பதாலேயே ! அரிட்டாபட்டி சமணப் படுகையில் தொடங்கி அங்கேயே திரும்ப வந்து முடியும்(அச்சில் வந்த கதையை மட்டும் சொல்கிறேன் :) ) இந்தப் பெருங்கதையில்.. முகுந்தனின் துணை கொண்டு காண்பித்தது .. மாற்றில்லா அரசியல் எனும் தீவிரவாதத்தின் கோர முகத்தை , மதுரையின் அழகை , காதலின் வன்முறையை , மனிதக் கீழ்மையை இவை எல்லாவற்றையும் விட வாசித்து முடித்ததும் என்னில் மேலெழுந்து நிற்பது இதில் காட்டப்பட்டுள்ள மனித மேன்மை தருணங்களே ! இடதுசாரி அமைப்பின் தீவிர உறுப்பினர்களை நண்பர்களாய் கொண்டு ஆனால் தன்னை அத...