வெண்முரசு - காண்டீபம் - வாசிப்பனுபவம்
சில ஆண்டுகளுக்கு முன்பு நான் இருக்கும் ஊரில் தமிழ்ச் சங்கமொன்றின் தீபாவளி விழாவில் வழக்கத்திற்கு மாறாக சில தமிழ்நூல்களையும் விற்பனைக்கு வைக்கலாம் என ஏற்பாடு செய்திருந்தோம். புத்தகங்களை ஒரு மேசையில் வைத்துவிட்டு அந்த விற்பனைக்கு உதவ ஒவ்வொருவரிடமும் கேட்டுக்கொண்டிருந்தேன் . நான் சென்று கேட்ட அனைவரும் ஒரே பொருளை வெவ்வேறு சொல்கொண்டு தந்தனர். 'என்னால் அது முடியாது' என்பதுதான் அது . அப்போது ஒரு நண்பர் அவராக வந்து புத்தகங்களை எடுத்து பிரித்துப்பார்த்துக்கொண்டிருந்தார் . கொஞ்சம் பேசியதில் அவருக்கு அந்த மேசையில் அன்று நாள் முழுக்க அமர்ந்து விற்பனையை கவனிக்க விருப்பம் எனத் தெளிந்தேன். அப்போது அவரிடம் நூல்கள் அதன் ஆசிரியர்கள் நூல்களுக்கான விலை விவரங்கள் என சொல்லத்துவங்கினேன். அதை அவர் இடைமறித்து நானும் புக் படிப்பேன். ஜெமோ வாசகன்தான் என்றார் ஷேக்ஸ்பியர் பிறந்த ஊரில் வாழ்ந்து வரும் பிரசாத். அன்று அத்துணை கூட்டத்திலும் நானும் அவரும் தனித்து இருந்தோம். உரையாடினோம் . அப்போது அவர் கேட்ட கேள்வி ' வெண்முரசு படிக்கிறீங்களா' . நான் 'இல்ல இப்போதான் தன்மீட்சி அறம் என சென்றுகொண...