Posts

Showing posts from July, 2025

வெண்முரசு - இந்திரநீலம் - வாசிப்பனுபவம்

Image
வெண்முரசு நாவல் வரிசையில் ஏழாவது நாவல் இந்திரநீலம். தினம் ஒரு அத்தியாயம் என்ற முறையில் வாசிப்பை நேசிப்போம் நண்பர்களுடன் இணைந்து , தினமும் எனக்குள்ளும் ஒலிக்கவிட்டுக் கொண்டிருக்கிறேன் வெண்முரசை. ஒருநாவல் முடிந்ததும் அடுத்ததை எடுத்து வெறுமனே எனது பார்வையில்படும்படி வைத்துக்கொள்வேன். பின்பு முன்னுரைகளை வாசிக்க ஒருநாள் எடுத்து அதை என்னுள் ஓடவிட ஒருநாள் என்று போகும். அவ்வாறான ஒரு செயல்பாட்டில் இம்முறை இறங்கியபோது எப்போதும்போல இப்போதும் பொய்க்காது நான் கண்டது திருசூழ் பெருநிலையை அதன் மூலமாய் அறிந்தேன் கேளு சரண் மகாபாத்யாய அவர்களை. இப்போது இந்திரநீலம் பற்றி .. துவாரகை கண்ட இளையயாதவன் தனது துணைவியராய் ருக்மிணி , ஜாம்பவதி , சத்யபாமை, நக்னஜித்தி, மித்ரவிந்தை, லட்சுமணை , பத்ரை , காளிந்தி ஆகிய எட்டு நாயகியரை கண்டடைந்து காதல்கொண்டு தம் உள்ளம் அமர்ந்த அத்தேவியரை வான்தோய் வாயில் கொண்ட துவாரகையில் அமர்த்தும் கதைகளை சொல்வதே இந்த நாவல். எட்டு குலங்களில் இருந்து பெண்கொண்டு வரும் கதைகள் துருபத இளவரசன் திருஷ்டத்யும்னன், இளைய யாதவருக்காக தொழும்பர்குறி பெற்ற சாத்யகி இவர்கள் இருவரின் நட்பாடல...